×

அதிசயபுரம் பள்ளியில் கழிப்பறை அமைக்க ரூ.1லட்சம் ஊர்வசி அமிர்தராஜ் வழங்கினார்

சாத்தான்குளம், டிச. 23:சாத்தான்குளம் அருகே அதிசயபுரம் டிஎன்டிடிஏ நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு கழிப்பறை அமைத்து தரகோரி மாநில இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச் செயலாளர் ஊர்வசி அமிர்தராஜிடம் பள்ளி நிர்வாகி, ஆசிரியர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து பள்ளியில் நடந்த நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சிக்கு தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் லூர்துமணி தலைமை வகித்தார். கிராம கமிட்டித் தலைவர் உதயமணி, தெற்கு மாவட்டத் தலைவர் சங்கர், வட்டாரத் தலைவர்கள் பார்த்தசாரதி, பிச்சிவிளை சுதாகர்  முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை பிரின்ஸஸ் சுமதி ஏஞ்சலா வரவேற்றார். பள்ளி தாளாளர் இஸ்ரவேல் ராஜதுரைசிங் ஆரம்ப ஜெபம் நடத்தினார். மாநில இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச் செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் ரூ.1லட்சத்தை பள்ளி நிர்வாகிகளிடம் வழங்கினார். முன்னதாக மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு தையல் இயந்திரம், சிறப்பூரில் பனையில் இருந்து தவறிவிழுந்த தொழிலாளிக்கு ரூ.5ஆயிரம் வழங்கி, மருத்துவ செலவை ஏற்பதாக தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் தலைவர் வேணுகோபால், மேற்கு வட்டார தலைவர் சக்திவேல்முருகன், ஒருங்கிணப்பாளர் ஜனார்தனம், மாவட்ட துணைத்தலைவர் தேவசகாயம், ஒன்றியக்குழு உறுப்பினர் சுபாகிறிஸ்டி பொன்மலர் சுரேஷ், மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் வில்லின் பெலிக்ஸ், முன்னாள் தூத்துக்குடி மாநகர தலைவர் எடிசன், மாவட்ட ஊடக பிரிவு தலைவர் மரியராஜ், முன்னாள் ஏபிசி தலைவர் ஜெயக்கொடி, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன், துணைத்தலைவர் இசைசங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சந்திரபோஸ், பட்டுராம்குமார், அதிசயபுரம் மாணிக்கம், பூத் கமிட்டி பொறுப்பாளர் ஸ்டாலின், ஜாண் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Urvasi Amirtaraj ,school ,Athisayapuram ,
× RELATED மே 31-க்குள் பள்ளிகளுக்கு நோட்டு,...